தஞ்சை: 9 மையங்களில் குரூப்-1 முதல் நிலைத் தேர்வு

துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப்பாதுகாவலர் பணிக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பொது முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகத்தில் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் திருமலைச் சமுத்திரம் சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி, பாரத கல்லூரி, வல்லம் அடைக்கலமாதா கல்லூரி உள்பட 9 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. 

தேர்வுக்காக 6224 பேர் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக தேர்வர்கள் அனைவரும் கடுமைச் சோதனைகளுக்குப் பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டுசெல்ல தடைவிதிக்கப்பட்டது. காலையில் தொடங்கிய தேர்வு மதியம்வரை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி