தஞ்சையில் பெரும் சோகம்: முன்னாள் அமைச்சர் மறைவு

ஒரத்தநாடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராகப் பணியாற்றியவருமான தா. வீராசாமி (88) வயது மூப்பு காரணமாக காலமானார். 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். தனது பதவிக்காலத்தில் ஒரத்தநாட்டில் நிலஅளவைக் கல்லூரி மற்றும் புறவழிச்சாலையைக் கொண்டு வந்ததோடு, விவசாயிகளுக்கான நெல் ஊக்கத்தொகையையும் வழங்கினார். இவரது மறைவுக்கு அதிமுகவினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி