தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 19 (வியாழக்கிழமை) அன்று அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இயற்கை மரணம், விபத்து நிவாரணம், கல்வி, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாம்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.