தஞ்சையில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி