தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கனரா வங்கி மேலாளரும் லயன்ஸ் கிளப் வட்டார தலைவருமான எஸ். தெட்சணாமூர்த்தி நாணயங்களின் மதிப்பினை மாணவர்களுக்கு விளக்கினார். நாணய சேகரிப்பாளர் வசுமித்திரன், லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் சுப்புராமன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நாணயங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.