கூடுதலாக பணி செய்ய வற்புறுத்தி, வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டியதால் மனமுடைந்த கேங்மேன் ராஜேஷ் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரிவு அலுவலர் சேகர், வணிக ஆய்வாளர் தமிழரசன், மின்பாதை ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தஞ்சை திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.