மகாசிவராத்திரி விழா விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் இன்று மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படும் இந்த விழாவில், தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையார், பெருயநாயகி அம்மனுக்கு நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழக அரசு சார்பில், பெரியகோயிலில் இசை நிகழ்ச்சிகள், திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தஞ்சபுரீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், ஐயாறப்பர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி