தஞ்சாவூர்: வெண்ணாற்றை முழுவதுமாக தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில் உள்ள வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் வெண்ணாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் மூலம் காவலூர், ரெங்கநாதபுரம் மெலட்டூர், திருக்கருக்காவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணற்ற விவசாயிகள் இந்த வெண்ணாறு பாசன நீரை நம்பித்தான் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் மாதம் 12ம் தேதி மெலட்டூரில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் மெலட்டூர் பகுதியில் உள்ள வெண்ணாறு மேல்கரை மட்டும் தூர்வாரப்பட்ட நிலையில் கீழ்க்கரை பக்கம் தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வெண்ணாறு முழுவதும் நாணல்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வெண்ணாறு ஓடை போன்று காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள வெண்ணாற்றை முழுவதுமாக தூர்வார வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி