தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதியின்படி 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுக்க வேண்டும், உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். வி. கண்ணன் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து முழக்கமிட்டனர். மேலும், காவிரி ஆணையக் கூட்டங்களால் பயன் இல்லை, மானிய விலை விதை நெல் தட்டுப்பாடு, மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.