நாஞ்சிக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனங்களில் தினமும் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக தஞ்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன.
அந்த பகுதியில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இந்த பகுதியில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக் கிடந்து போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.