முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் 2 நாள் சுற்றுப்பயணம்

தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக் காக சென்று ஆய்வு செய்வதோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார். அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் 2 நாட்கள் சுற்றுப்பய ணம் செய்து அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கி றார்.

தஞ்சையில் வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் ரோடு ஷோ, பழைய பஸ் நிலையம் அருகே கருணாநிதி சிலை திறப்பு விழா, கட்சி நிர்வாகிகளுடன் சந் திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு அவர் தஞ் சையில் தங்குகிறார்.

மறுநாள் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை கட்சி நிர்வாகி இல்ல திரு மண விழாவில் கலந்து கொள்வதோடு, பின்னர் தஞ்சை மன்னர் சர போஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இந்த நிலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்பி ராஜாராம், முரசொலி எம். பி. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி