திருவோணம்: ரேஷன் கடைகளில் பதிவை புதுப்பிக்க அழைப்பு

திருவோணம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் (ஈகேஓவைசி) பதிவு செய்யாத நபர்கள் உடனடியாக அவரவருக்கு உண்டான அங்காடியில் தங்களது குடும்ப அடையாள அட்டை, ஆதார் கார்டு உடன் சென்று (ஈகேஓவைசி) பதிவேற்றுமாறு திருவோணம் வட்ட வழங்கல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக (ஈகேஓவைசி) நடைமுறை அமலுக்கு வந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் திருவோணம் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் (ஈகேஓவைசி) பதிவு செய்யாத நபர்கள் ஏராளமானர். எனவே உடனடியாக அவரவருக்கு உண்டான ரேஷன் கடைகளில் தங்களது பெயர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே இதனை உறுதி செய்து உடனடியாக தங்களது (ஈகேஓவைசி) புதுப்பித்து கொள்ளுமாறு திருவோணம் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி