தஞ்சையில் கர்நாடக துணை முதல்வருக்கு கடும் எதிர்ப்பு

தஞ்சையில் நேற்று பா. ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: - தமிழக அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்படக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம். 

காவிரியின் குறுக்கே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தான் என் ஒரே குறிக்கோள் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி. கே. சிவக்குமார் உறுதியாக கூறி வருகிறார். அவர் வருகிற 22-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தந்து முதல்-அமைச்சரை சந்தித்து தொகுதி வரைமுறை எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அவர் வருகையை கண்டித்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும். பா. ஜனதா கட்சி சார்பில் டி. கே. சிவக்குமார் உருவப் பொம்மை எரிப்பு, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என டெல்டா பகுதி முழுவதும் நடத்தப்படும். தி. மு. க. கூட்டணியில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி