மாதாகோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்கள்

தஞ்சை அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் தொடங்கியது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 700 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 40 வீரர்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காளைகளைப் பிடித்தனர். சிறந்த வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடு பிடிக்கும் போது வீரர்கள் காயமடையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி