ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கீழ நத்தத்தைச் சேர்ந்த 83 வயது மனோன்மணி என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.