அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிப். 8 ஞாயிறு தஞ்சாவூர் வருகை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை (8 ஆம் தேதி) தஞ்சாவூர் வருகை தருகிறார். காலை 9 மணிக்கு வல்லம் பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, வல்லம் பாலாஜி மஹால் திருமண மண்டபத்தில் தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதி ஐடி விங் செயலாளர் கீர்த்தி வாசன் திருமணத்திலும், பின்னர் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் திருவாரூர் மன்னார்குடி அதிமுக பிரமுகர் திருமணத்திலும், திருவையாறு ஒன்றிய செயலாளர் சூரிய பிரகாஷ் திருமணத்திலும் கலந்துகொள்கிறார். காலை உணவு அருந்திவிட்டு, கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

தொடர்புடைய செய்தி