சேலம் அருகே விபத்து.. ஒரத்தநாட்டை சேர்ந்த 15 பேர் காயம்

ஒரத்தநாடு அருகே அரும்பலை பகுதியைச் சேர்ந்த 15 பேர் கொல்லிமலை கோயில்களுக்குச் சென்றுவிட்டு சுற்றுலா வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வேன் வந்தபோது பிரேக் வயர் துண்டிக்கப்பட்டது. எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பியபோது, அது பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 15 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி