தஞ்சாவூர்: பெண்கள் பயங்கர போராட்டம் (VIDEO) ; 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் அசூர் பகுதியில் அரசு மதுக்கடை உள்ள இடத்தில் மது பிரியர்களின் அதிக நடமாட்டம் இருப்பதால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்தக் கடையை அகற்றக்கோரி பாமக மாவட்டச் செயலர் ம. க. ஸ்டாலின் தலைமையில் பூட்டுப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதேபோல் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோயிலுக்கு எதிரே ஒரு அரசு மதுக் கடை, காரைக்கால் பிரதான சாலையில் உள்ள 2 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பூட்டுப்போராட்டம் அறிவித்தனர். 

அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை ஏராளமான பெண்கள் வருவாய் கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் உதவி ஆட்சியர் ஹிருத்யா எஸ் விஜயன் தலைமையில், கோட்ட உதவி கண்காணிப்பாளர் அங்கித் சிங் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாளர் தமிழ்மணி, வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது 3 மதுக்கடைகளையும் 2 மாதங்களுக்குள் அகற்றிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி