தஞ்சாவூர்: கலைஞர் சிலை அமைப்பது எதற்கு: உதயநிதி விளக்கம்

திருமழபாடியில் கலைஞர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கலைஞர் சிலைகள் அமைப்பது அவரது கொள்கைகளையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே என்றார். பெண்களின் முன்னேற்றத்திற்காக கலைஞர் பல முன்னோடித் திட்டங்களைத் தந்ததாகவும், தற்போது முதல்வர் ஸ்டாலின் கலைஞர் வழியில் இலவசப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி