கும்பகோணம்: அனுமதியின்றி உண்ணாவிரதம்..விசிகவினர் கைது

கும்பகோணம் அருகே வளையபேட்டையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தொண்டர்கள் விசிக கட்சியின் கொடிமரத்தை அந்த கட்சியின் சேர்ந்தவர்கள் உடைத்தனர். அதனை கண்டித்து கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் காந்தி பூங்கா அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கும்பகோணம் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் குரு மதி மற்றும் முருகதாஸ் நிர்வாகிகள் தலித் இளங்கோவன், விடுதலை செல்வன், திருமாறன் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி போராட்டத்தால் காந்தி பூங்கா அருகே கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன், கும்பகோண கிழக்கு காவல்துறை ஆய்வாளர் சிவ செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி