கால்நடை மருத்துவர்களே.. வேலை ரெடி...

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதி, செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள், நவம்பர் 25 காலை 11 மணிக்கு தஞ்சாவூர் ஆவின் தலைமை இடத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி