கும்பகோணம் வளையப்பேட்டை பைபாஸ் சாலை அரசலாற்றுக்கரையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தாலுகா காவல் ஆய்வாளர் பாலசந்தர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தப்பியோட முயன்ற தாராசுரம் சரவணன் (28) மற்றும் வளையப்பேட்டை முரளிதரன் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.