அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்த போது அவர்கள் வைத்திருந்த பையில் இரண்டு புகையிலை மூட்டைகள் இருந்தன. விசாரணையில் மூர்த்தி செட்டி தெருவைச் சேர்ந்த சுகுமார் மகன் கணேஷ் குமார் (32) தாராசுரம் சந்தையில் சுமை தொழிலாளி, மற்றொருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பஜன்லால் மகன் சேத்தன் குமார் (32) என்று தெரிய வந்தது. சேத்தன் குமார் ராஜஸ்தானில் இருந்து கும்பகோணத்திற்கு ஸ்டேஷனரி பொருட்கள் லாரியில் கொண்டு வரும் போது அதனுடன் சேர்த்து புகையிலை பொருட்களையும் கொண்டு வந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 110 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் 2, இரண்டு கைபேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். புகையிலை பொருட்கள் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.