கும்பகோணம் பகுதியில் மே. 19 இல் மின் விநியோகம் இருக்காது

வரும் மே 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, கும்பகோணம் மாநகரம் தவிர தாராசுரம், சிவபுரம், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி, நாச்சியார்கோவில், கொரநாட்டுக்கருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி