தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்ற இயக்கப்படும் நீருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.