கும்பகோணத்தில் தவெகவினா் சாலை மறியல்

கும்பகோணம் காமராஜர் சாலையில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதன் அருகே தேவாலயம், பள்ளிக்கூடம், குடியிருப்புகள் உள்ளதால் கடைகளை அகற்றக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியின் மாவட்டத் தலைவர் அஞ்சனா பாலாஜி தலைமையில், பெண்கள் மகாமகக் குளத்திலிருந்து ஊர்வலமாக கையில் தாலிக்கயிற்றை ஏந்தி அரசு மதுபானக் கடைகளை நோக்கி வந்தனர். அவர்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பா. ரமேஷ் தலைமையில் மறித்தனர். உடனே பெண்கள் கடைமுன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்து முழக்கமிட்டனர். போலீசார் 20 பெண்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி