தஞ்சை: தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் மறைந்த திமுக முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் 16 ஆவது வட்டக் கழக செயலாளர் கே. குமார் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு வட்டக் கழக செயலாளர் கே. குமார் இனிப்புகள் வழங்கி வேட்டிச் சேலைகள் வழங்கியும் வாழ்த்துதெரிவித்தார். உடன் பாலாஜி, எக்ஸ்.எம்.சி, வட்டப் பிரதிநிதி செல்வ மாணிக்கம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி