குடந்தையில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூலி தொழிலாளி விஷால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியிடம் விஷால் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.