தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பைக், ஸ்கூட்டர் ஓட்ட தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் எச்சரித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாணவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்த பின்னரே ஒப்படைக்கப்படும். இந்த உத்தரவு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி