சாக்கோட்டை பகுதியில் நாளை (பிப். 17) மின்வெட்டு

கும்பகோணம் மாநகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 17ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் கும்பகோணம் மாநகரம், உமா மகேஸ்வரபுரம், கோ. சி. மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரியதிடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள்கோவில், நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி