தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க. ஸ்டாலின் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மாணவர் மற்றும் மாணவி இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டியதாகப் புகார் எழுந்தது. அந்த மாணவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.