தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்திலை, மதுபோதையில் அவரது வீட்டின் அருகே வந்த இருவர் கண்டித்ததால், நள்ளிரவில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது தொடர்பாக திருநீலக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். செந்திலின் தங்கை மகன் பாலகணேசுக்கும், அந்த சிறுவர்களுக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், அவரைத் தேடி வந்தபோது இந்த பிரச்சனை ஏற்பட்டு குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.