கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக ஆக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக 15 ஆண்டுகள் இந்த மாமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அப்போது இருந்த போது தேர்தல் வாக்குறுதியில் கழக ஆட்சி அமைந்தால் கும்பகோணம் தலைநகரமாக ஆக்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அளித்த உறுதியினை நினைவுபடுத்தி இந்தக் கூட்டத் தொடரில் கும்பகோணம் மாவட்டத் தலைநகரமாக அறிவிக்க வேண்டி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை மனுவை அளித்து கேட்டுக்கொண்டார்கள்.