கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு, ஸ்ரீ பருவத ராஜகுரு மகாஜனங்களின் 76ஆம் ஆண்டு பழனி தைப்பூச காவடி பாதயாத்திரை நேற்று காலை துவங்கியது. இதனை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக கும்பகோணத்திலிருந்து புறப்பட்டனர். இசைக்கு ஏற்றவாறு இளைஞர்கள் நடனமாடியும், சிறுவர்கள் பறை இசைத்தும் தங்களது காவடியை தூக்கிச் சென்றனர்.