பாமக பிரமுகர் கொலையாளிகளை பிடிக்க என்.ஐ.ஏ தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.திருவிடைமருதூர் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்ற வருவதாக தெரிகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரை பிடிக்க தேசிய புலனாய்வு முகமை தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்தி