தேசிய மாணவா்படையினா் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்

கும்பகோணம் தேசிய மாணவர் படை 8-ஆவது பட்டாலியன் சார்பில், வந்தே மாதரம் உருவான 150-ஆவது நிறைவு ஆண்டை முன்னிட்டு கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை அணிவகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் பங்கேற்று வந்தே மாதரம் பாடல் பாடி, 150 மரக்கன்றுகளை நட்டனர். லெப்டினன்ட் கர்னல் சசிதரன் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தொடர்புடைய செய்தி