கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி, ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் இன்று (பிப். 21) காலை 11.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிப். 28-ல் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1-ம் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், அன்று மாலை காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் கோயில்களில் தேரோட்டமும் நடைபெற உள்ளன.