அரியலூா் மாவட்டம், காரைக்குறிச்சி அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராமனின் மனைவி லதா (42), எஸ்பிஐ வங்கி முகவராகப் பணிபுரிந்து வந்தார். திங்கள்கிழமை, கும்பகோணத்தில் கண் சிகிச்சைக்காக உறவினர் கெளசல்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நீலத்தநல்லூா் அசூா் சாலையில் பின்னால் வந்த டிப்பா் லாரி ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லதா மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.