தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக பாலசுந்தரம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்த மீனா, திருவையாறுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளாா். புதிய ஆய்வாளருக்கு சக போலீஸாா் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனா்.