கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாக்கோட்டை அன்பழகனை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் வினோத் இன்று தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்தொகுதியில், வலுவான பின்னணி கொண்ட வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வினோத் சாதனை வெற்றி பெற்றார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து கும்பகோணம் பகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.