கும்பகோணம்: கார் கண்ணாடியை அடித்து உடைத்தவர் கைது

கும்பகோணம் மடத்துத் தெருவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட துக்காம்பாளையத் தெருவைச் சேர்ந்த சந்துரு என்கிற ஜெயச்சந்திரன் (40) என்பவர், அவ்வழியாக வந்த காரின் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி