கும்பகோணம் அருகே குடிதாங்கியைச் சேர்ந்த 55 வயது விவசாயி சந்திரன், செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்க வயலுக்குச் சென்றபோது, அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற உறவினர்கள், அவர் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். சுவாமிமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.