கும்பகோணம்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருமலை தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 39 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், 8 பேருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 82 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர். இந்த முகாம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி