கும்பகோணம்: கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்

கும்பகோணம் அருகே வடக்கு மூலங்குடி சுந்தர மகா காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, விட்டலூர் மேலத்தெருவில் காளி வேஷம் கட்டுவதில் ஆகாஷ் தரப்பிற்கும், சங்கர் மற்றும் வினோத்குமார் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த 3 பேர் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி