கும்பகோணம்: வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கார்த்திக்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோன புகாரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கும்பகோணம் தாலுக்கா போலீசார், மதியழகன் (20), அருணாச்சலம் (23), சீனிவாசன் (30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் மேலும் 4 வாகனத் திருட்டுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕