கும்பகோணம்: 1008 இளநீர் அபிஷேகம்: மக்கள் நலனுக்காக சிறப்பு பூஜை

கும்பகோணம் மடத்துதெரு படைவெட்டி மாரியம்மன் கோயிலில் உலக மக்கள் நன்மைக்காக 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் வெள்ளி கவசம் அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் பகவத் படித்துறையிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் பூ தட்டுகள் கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதானமும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி