மேல்மருவத்தூா் காவலா்கள் மீது நகை வியாபாரிகள் புகாா்

தஞ்சை சரக காவல்துறை தலைவரிடம் குடந்தை நகை வியாபாரிகள் சங்க செயலர் பாலாஜி, குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு செயலர் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோர் அளித்த மனு: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கீழ்வீதியில் நகை வணிகம் செய்யும் கிஷோரின் கடைக்கு காவல்துறையினர் எனக் கூறிக்கொண்டு சிலர் ஜூன் 7-ஆம் தேதி வந்தனர். கடையில் இருந்த கிஷோரின் மகன், ஊழியரிடம் திருட்டு நகை தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 

இது குறித்து விசாரித்தபோது, மேல்மருவத்தூர் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது அங்கு இருவரும் வரவில்லை. பின்னர் வணிகர்கள் காத்திருந்தபோது ஜூன் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்து வந்தனர். அப்போது குற்றவாளி ஒருவர் நகையை கும்பகோணத்தில் கிஷோர் கடையில் விற்றதாகக் கூறி, இருவரையும் காவல்துறையினர் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எழுதி வாங்கினர். 

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செயல். யாரோ ஒரு குற்றவாளி கூறும் தகவலை கொண்டு, தொடர்ந்து இந்தக் கடையை 4 முறை உரிமையாளரை காவல்துறையினர் மிரட்டி, அவர்களிடம் நகையை வாங்கும் செயல் தொடர்வதால், உரிமையாளரின் குடும்பத்தினர் தொடர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி