தஞ்சை: எம்பி ஆர் சுதா பேட்டி

நாங்கள் இந்தியை வெறுக்க வில்லை திணிக்க கூடாது என்கிறோம் என்று சோழன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாமில் மக்களவை உறுப்பினர் ஆர். சுதா எம்பி பேசினார்.கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர். சுதா எம். பி. செய்தியாளர்களிடம் கூறியது,மும்மொழிகொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.

 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குங்கள் என்றால் வெறுப்போடு பார்க்கிறார். நான் அரசுப்பள்ளியில் படித்து வழக்குரைஞராகி தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளேன். நாங்கள் இந்தியை வெறுக்கவில்லை திணிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம் என்றார். நிகழ்வின் போது மாநகர தலைவர் மிர்சாதீன், மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு கே. விஜயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி