ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை: சுவாமிமலையில் தயாரிப்பு

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை திம்மக்குடியைச் சேர்ந்த ஸ்தபதி வரதராஜ், மதுரை வி. மீனாட்சிபுரம் (வெளிச்சநத்தம்) மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோயிலுக்காக 12 ஐம்பொன் சிலைகளை வடிவமைத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூல சிலைகளின் பாரம்பரிய வடிவமைப்பைப் பின்பற்றி, சுமார் 3 மாதங்களாக ரூ. 5 லட்சம் மதிப்பில் இந்தச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. இதில் மீனாட்சி அம்மன், நடராஜர், சிவகாமி அம்மன், நால்வர் மற்றும் பதஞ்சலி உள்ளிட்ட சிலைகளும், மேற்கூரைக்கான தங்க, வெள்ளி முலாம் பூச்சுகளும் அடங்கும். இந்தச் சிலைகள் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கோயிலின் குடமுழுக்கின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி