அறுவடை வயல்களில் வைக்கோல் கட்டு ரூ. 40-க்கு விற்பனை

கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி அறுவடை முடிந்த வயல்களில் டிராக்டர்கள் மூலம் வைக்கோல் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு கட்டு வைக்கோல் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வைக்கோல் கட்டுகள் ஈரோடு, பழனி, தர்மபுரி, கேரளா மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இவை காளான் வளர்ப்பு மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. சம்பா அறுவடைப் பணி தீவிரம் அடைந்துள்ளதால் வைக்கோல் கட்டு ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி